இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவியத்தாயின் இளைய மகன்

அழகிய கண்களுக்கு தாசன்।நான்!எனவே என் பெயரை கண்ணதாசன் என அமைத்துக் கொண்டேன் என்றார் கவிஞர் கண்ணதாசன். கலைமகள் அருளிய கவித்திறத்தால் காலம் கடந்து காவியமானார்.ஒவ்வெராரு மனிதனுடைய।வாழ்விலும் எல்லா சூழ்நிலைகளிலும் என் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.ஆம் கவிஞரே!வெறும் வரிகளா அவை? அத்தனைக் கவிதைகளும் அள்ளித்தெறித்த முத்துக்கள். நம் வீட்டு முற்றத்தில் எல்லாம் அவருடைய கவிதைகள் இறைந்து கிடக்கின்றன..."மனமகளே மனமகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்கிற வரிகள் ஒலிக்காத திருமண இல்லங்கள் உண்டா? துக்க வீட்டிலும் "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி..என்று மனதை தேற்றிக்கொள்ள வைத்தது அவரது வரிகள். ஆங்கில இலக்கிய உலகில் ஜொனாதன் ஸ்விஃட் என்கிற அறிஞர், பாடசாலைகளிலும் நூலகங்களிலும் மட்டுமே கிடைக்கப்பெற்ற அரிய கருத்துக்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தித் தந்தார். கவியரசரை நான் தமிழ்நாட்டு ஸ்விஃட் என அழைக்க விழைகிறேன்,  "அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே" " "ஒருமடமாது ஒருவனுமாகி" போன்ற கரடுமுரடான பாக்களை பாமரனும் புரிந்துக் கொள்ளும் வகைய...